நெருப்பு தத்துவம்:
எந்த ஒரு சுய ஜாதகத்திலும் நெருப்பு ராசிகள் எனப்படும் மேஷம், சிம்மம், தனுஷ் ஆகிய ராசிகள் நன்றாக இருந்தால். நேர்மை, சுயக்கட்டுப்பாடு, கடமை, அதிகாரம், கௌரவம், சுயமரியாதை உடையவார்களாக இருபார்கள். அதே நெருப்பு ராசிகள் கெட்டு இருந்தால். மூர்க்கத்தனம், முன்கோபம், சுயநலம், போதை, போகம் உடையவார்களாக இருபார்கள்.
நிலத் தத்துவம்:
எந்த ஒரு சுய ஜாதகத்திலும் நில ராசிகள் எனப்படும் ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் நன்றாக இருந்தால். சகிப்புதன்மை, நிதானம், அனுசரித்தல், மண், மனை, வாகன யோகம் உடையவார்களாக இருபார்கள். அதே நில ராசிகள் கெட்டு இருந்தால். சோம்பேறி, பெண்ணாசை, ஏமாற்றம், பிடிவாதம், தேவையற்ற பேச்சு உடையவார்களாக இருபார்கள்.
காற்று தத்துவம்:
எந்த ஒரு சுய ஜாதகத்திலும் காற்று ராசிகள் எனப்படும் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் நன்றாக இருந்தால் புத்திசாலி, சுய சிந்தனை, முற்போக்கு சிந்தனை உடையவார்களாக இருபார்கள். அதே காற்று ராசிகள் கெட்டு இருந்தால் முட்டாள் தனமான சிந்தனை, முரண்பாடான கொள்கை, எளிதில் மாறும் குணம் உடையவார்களாக இருபார்கள்.
நீர் தத்துவம்:
எந்த ஒரு சுய ஜாதகத்திலும் நீர் ராசிகள் எனப்படும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் நன்றாக இருந்தால் கற்பனைத் திறன், திட்டமிட்டு செயல்படல், தனிமையை விரும்புதல், மனிதநேயம் உடையவார்களாக இருபார்கள். அதே நீர் ராசிகள் கெட்டு இருந்தால் உணர்ச்சி வசப்படல், பிடிவாதம், கேளிக்கை, பிறரை சார்ந்து வாழ்தல், சபலம் உடையவார்களாக இருபார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக