திருமணப் பொருத்தம் தொடர்பான ஒரு தெளிவான விளக்கத்தை கொடுப்பது தான் இந்த பதிவின் நோக்கம்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது என்று முடிவெடுத்த பின்பு முதலில் பின்பற்றுவது, ஜோதிடரீதியாக நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது தான்.
இதில் ஆண், பெண் இருவர் நட்சத்திரங்களுக்கும் கணம், ரச்சு, நாடி, யோனி இராசி, இராசி அதிபதி, வசியம், வேதை, தினம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம் எனும் 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் உள்ளது என்பதைப் பார்த்து அதன்படியே முடிவு செய்கின்றனர்.
மேலும் ரச்சு, யோனி, மகேந்திரம் ஆகிய பொருத்தங்கள் தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு இல்லை எனில் ஆயுள் பாதிப்பு, தாம்பத்திய திருப்தி கிடைக்காது, குழந்தை பிறக்காது போன்ற தவறான கருத்துக்களும் நிலவி வருகிறது.
ஆயுள், தாம்பத்திய திருப்தி, குழந்தை பிறப்பு போன்றவை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பாவக நிலையை வைத்தே முடிவு செய்ய வேண்டுமே தவிர நட்சத்திரத்தை வைத்து அல்ல. மேலும் பெண் நட்சத்திரம் ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் போன்ற நட்சத்திரங்களாக இருந்தால், அது தோஷமான ஜாதகம் என்ற முடிவுக்கு வருவது மிகவும் தவறாகும்.
ஏனெனில் ஒரு நாளில் எந்த நேரத்திலும் பிறக்கும் குழந்தைக்கும் அன்றைய தினம் என்ன நட்சத்திரமோ, அதே நட்சத்திரம் தான் அந்த நாள் முழுவதும் இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைக்கும் இருக்கும்.
ஆனால் அப்படி பிறக்கும் குழந்தையின் 12 பாவகங்களின் பாகை நிலை என்பது பிறக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும், கேரளாவில் பிறக்கும் குழந்தைக்கும், சென்னையில் பிறக்கும் குழந்தைக்கும், திருச்சியில் பிறக்கும் குழந்தைக்கும் ஒரு நாளின் நச்சத்திரம் என்பது ஒன்றாகவே இருக்கும், ஆனால் அவர்களது பாவகங்களின் நிலை என்பது முற்றிலும் மாறுபட்டதாக அமையும்.
உண்மை நிலை இப்படி இருக்கும் போது நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் வைத்து திருமணம் செய்வது முற்றிலும் தவறு என்பது நன்கு தெரியவரும்.
பிறகு எப்படி தான் பொருத்தம் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறதா இதோ பதில். "தம்பதிகள் இருவரின் ஜாதகத்திலும் பாவக நிலை எப்படி உள்ளது மற்றும் திருமணம் நடக்கும் நாளில் இருந்து இருவரின் ஜாதகத்திலும் நடக்கும் திசைகள் நற்பலனை செய்கிறதா, தீய பலனை செய்கிறதா மேலும் அது எத்தனை வருடம் செய்கிறது, என்பதை ஆராய்ந்து தான் திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்".
முக்கியமாக நமது ஜோதிட முறை என்பது எந்த ஒரு நாத்திகனின் கேள்விக்கும் அறிவியல் பூர்வமான தெளிவான விளக்கத்தைக் கொடுக்க முடியும்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக