குழந்தையை குறிக்கும் புத்திர ஸ்தானம் என்னும் 5ம் வீடு எனக்கு கெட்டுவிட்டதா?

இந்த பதிவில் ஒரு நண்பரின் கேள்விக்கு பதில் தேடவிருக்கிறோம். இந்த நண்பருக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, அதற்கு என்ன காரணம் என்பதை அந்த நண்பரின் ஜாதகத்தை வைத்து விடையை கண்டுபிடிப்பதே இந்த பதிவு ஆகும். 

இந்த நண்பரின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 


எந்த ஒரு சுய ஜாதகத்திலும் குழந்தை பாக்கியத்தை குறிக்க கூடிய வீடு 5ம் வீடு ஆகும். எனவே 5ம் வீடு கெட்டுவிடாமல் நன்றாக இருப்பது மிக அவசியம். மேலும் ஒரு ஜாதருக்கு அமையும் வாழ்க்கைத்துணையின் புத்திர ஸ்தானம் என்னும் 11ம் வீடும் நன்றாக இருப்பது அவசியம். அதே வேளையில் உடல் நலனை குறிக்கும் 6ம் வீடும் நன்றாக இருப்பது அவசியம். 

மேலும் உபய கிரகங்கள் எனப்படும் குரு, புதன் மற்றும் சிம்மராசியின் அதிபதியான சூரியன் ஆகிய கிரகங்கள் நன்றாக இருப்பது அவசியம். மேலும் முக்கியமாக நடக்கும் தசை, புத்தி நன்றாக இருப்பதும் மிக அவசியம். 

நான் மேலே குறிப்பிட குழந்தை பாக்கியத்திற்கு தேவையான பாவகங்கள் மற்றும் கிரகங்கள், இந்த நண்பரின் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். 

5,6,11 ஆகிய மூன்று வீடுகளும் 12ம் வீட்டுடன் சம்மந்தம் பெற்று திறத்தன்மையிலும், சதவீத அடிப்படையில் 60% கெட்டு இருக்கிறது. மேலும் கிரக வரிசையில் புதன் பலம் இழந்த நிலையில் இருக்கிறது. குரு மற்றும் சூரியன் நல்ல நிலையில் இருக்கிறது. 

இந்த ஜாதகருக்கு 20.02.2013 அன்று திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் நடந்தபோது ஜாதகருக்கு சுக்கிர தசை, சந்திர புத்தி நடந்து இருக்கிறது. 

சுக்கிர தசை 2,4 ஆகிய வீடுகளின் பலனை 23.09.208 வரை செய்கிறது. இந்த இரண்டு வீடுகளும் சதவீத அடிப்படையில் 100% நல்ல நிலையில் இருக்கிறது. இதில் 2ம் வீடு பணம் மற்றும் குடும்பத்தை குறிக்கும். 4ம் வீடு சுகமான வாழ்க்கையை குறிக்கும். மேலும் 2ம் வீடு கடக ராசியில் இருப்பதால் சுக்கிர தசையின் முன்பகுதியிலேயே தனக்கென்று ஒரு குடும்பத்தை கொடுத்துவிடும். 4ம் வீடு கன்னி ராசியில் இருப்பதால் தசையின் இறுதி பகுதியின் சுகமான வாழ்வை கொடுத்து விடும் என்பது தெரிய வருகிறது. 

சந்திர புத்தி 8ம் வீட்டின் பலனை செய்கிறது இந்த வீடும் கெட்டு இருக்கிறது. திருமணம் முடிந்து சந்திர புத்தி முடியும் வரை குழந்தை இல்லை, அடுத்து வந்த செவ்வாய் புத்தியும் முழுமையான கெடுபலனையே செய்கிறது ஆகவே செவ்வாய் புத்தி முடியும் வரை குழந்தை இல்லை, அடுத்து வந்த ராகு புத்தி நன்மையை செய்தாலும் கோச்சாரம் 12ம் வீட்டின் பலனையே இயக்கியதால் ராகு புத்தி புத்தி முடியும் 24.11.2018 வரை குழந்தைக்கான வாய்ப்பு இல்லை. 

அடுத்து வரும் குரு புத்தி 12ம் வீட்டின் பலனையே இயக்கும். எனவே குரு புத்தி கால கட்டத்தில் கோச்சரதில் நல்ல பலனை செய்தால் குழந்தைக்கான 40% வாய்ப்பு கிடைக்கும். 

அடுத்து வரும் சனி, புதன் புத்திகள் 9ம் வீட்டு பலனை செய்யும் இந்த வீடு நன்றாக இருக்கிறது. மேலும் இது கும்ப ராசியில் இருக்கிறது, இந்த வீட்டுக்கு சூரியனின் முழு பலமும் கிடைக்கிறது. எனவே இந்த கால கட்டத்தில். குழந்தைக்கான வாய்ப்பு 50% உள்ளது. அதுவும் பெண்குழந்தைக்கே. 

இந்த நண்பருக்கு இயற்கையாகவே 5ம் வீடு திறத்தன்மையில் கெட்டு இருப்பதும், நடக்கும் புத்திகளின் கெடுபலனுமே குழ்த்தை தாமதத்திற்கு முழு காரணம்.

பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக