business loss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
business loss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொழிலில் நஷ்டம் ஏற்பட காரணம் என்ன?

இந்த பதிவில் ஒரு நண்பரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதற்கான காரணத்தை ஜோதிட ரீதியாக ஆராய போகிறோம். அந்த நண்பரின் ஜாதகம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 



மேலும் இந்த நண்பரின் ஜாதகத்தில் நன்றாக இருக்கும் வீடு மற்றும் கெட்டுபோய் இருக்கும் வீடுகளின் விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 



மேலும் தசைகளின் விவரமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 



6,7,8,12 ஆகிய வீடுகளை தவிர மற்ற அனைத்து வீடுகளும் நன்றாக உள்ளது. எனவே ஜாதகருக்கு நடந்து முடிந்த மற்றும் நடக்கும் கிரகங்களின் தசை, புத்திகள் 6,7,8,12 ஆகிய வீடுகளின் பலனை செய்யும் போது கஷ்டங்களை சந்திப்பார் என்பது தெரிய வருகிறது. 

வயது வாரியாக பார்க்கும் போது:
8 வயது வரை புதன் தசை: 
தசை விவரம் சார்ட்டில் புதன் தசையை பார்க்கவும் புதன் தீமை செய்யும் அமைப்பி இருக்கும். 8வயது சிறுவனுக்கு தீமை என்றால் என்னவாக இருக்க முடியும் உடல்நலம் பாதிக்கப்படும்.

15 வயது வரை கேது தசை: 
தசை விவரம் சார்ட்டில் கேது தசையை பார்க்கவும் கேது நன்மை செய்யும் அமைப்பில் இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் பள்ளிப் படிப்பை சிறப்பாக படித்திருப்பார். 

35 வயது வரை சுக்கிர தசை: 
தசை விவரம் சார்ட்டில் சுக்கிர தசையை பார்க்கவும் சுக்கிரன் நன்மை செய்யும் அமைப்பில் இருக்கும். இது 5ம் வீட்டின் பலனை செய்யும் இந்த 5ம் வீடு சிம்ம ராசியில் இருப்பதால் முதுகலை படிப்பு வரை படித்து சொந்தமாக முதலீடு செய்து தொழில் செய்யும் யோகத்தை பெறுவார், மேலும் இந்த கால கட்டத்தில் திருமணம், குழந்தையையும் பெற்று விடுவார். 

தற்போது நடப்பது சூரிய தசை: 
தசை விவரம் சார்ட்டில் சூரிய தசையை பார்க்கவும் சூரியன் மிகுதியான நன்மையையும், அதிகமான தீமையையும் செய்யும் அமைப்பில் இருக்கும்.
இது 2,6,8,12 ஆகிய வீடுகளின் பலனை செய்யும். நன்றாக இருக்கும் வீடு மற்றும் கெட்டுபோய் இருக்கும் வீடுகளின் விவரம் என்ற சார்ட்டை பார்க்கவும், அதில் 6,8,12 ஆகிய வீடுகள் கெட்டும் 2ம் வீடு மட்டும் நல்ல முறையில் இருக்கும். எனவே தற்போது நடக்கும் சூரிய திசையில் கஷ்டப் படுவார் என்பது தெரிய வருகிறது. 

2,6,8,12 ஆகிய வீடுகள் என்ன பலனை செய்யும்: 
2ம் வீடு : கூட்டாளிகளால் இலாபம், ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் என்ற வகையில் நல்ல பலனை செய்யும். 

6ம் வீடு : வேலைக்காரர் துரோகம், தொழில் நாஷ்டம், குடும்ப மற்றும் கடன் பிரச்சனை என்ற வகையில் தீய பலனை செய்யும். 

8ம் வீடு : வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், திருப்தியில்லை என்ற வகையில் தீய பலனை செய்யும். 

12ம் வீடு : கோழை, மனைவி மற்றும் கூட்டாளிக்கு அடிபணிதல், கூட்டாளிக்கு இலாபம், இரகசியத்தை காப்பாற்ற முடியாது என்ற வகையில் தீய பலனை செய்யும். 

இவற்றில் தீமை அதிகமாக இருப்பதால் தற்போது நடக்கும் சூரிய தசையில் தீமையான பலனையே சந்திப்பார். இந்த காலகட்டத்தில் முதலீடு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. 

இதைப்போன்று நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு ஜாதகத்தின் உண்மைநிலை புரியும். இதை வைத்து எந்த ஒரு ஜாதகருக்கும் அவர் வாழ்க்கையின் உண்மை நிலையை துல்லியமாக புரியவைக்க முடியும். 

பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.