எனக்கு திருமணம் எப்போது நடைபெறும் மற்றும் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும், என்ற ஒரு நண்பரின் கேள்விக்கு, அவரின் ஜாதகத்தை வைத்து நமது ஜோதிட முறைபடி கணிதம் செய்து பதில் தேடுவதே இந்த பதிவின் நோக்கம் ஆகும்.
நண்பரின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மேலும் இந்த நண்பருக்கு நல்ல விதமான பலன்களை செய்யும் வீடுகள் மற்றும் கெட்ட விதமான பலன்களை செய்யும் வீடுகளின் விவரங்கள் கிராஃப் வடிவில்கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மேலும் முக்கியமாக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில், இந்த நண்பருக்கு நடந்து முடிந்த மற்றும் நடக்க போகும் கிரகங்களின் தசைகள் விவரங்கள் கிராஃப் வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அடுத்தபடியாக நண்பருக்கு நல்ல பலன்களை செய்யும் வீடுகள் மற்றும் கெட்ட பலன்களை செய்யும் வீடுகள் எவை எவை என பார்த்து விடுவோம்.
நல்ல பலன்கள் செய்யும் வீடுகள்:
1,3,7,11 ஆகிய வீடுகள் மிதுன ராசியுடன் சம்மந்தம் பெற்று சதவீத அடிப்படையில் 100% நன்மையான பலனை செய்யும். எந்த கிரகம் தன்னுடைய தசை மற்றும் புத்தியில் இந்த வீடுகளின் பலனை செய்கிறதோ, அப்போது இந்த நண்பர் நல்ல பலனை தசை மற்றும் புத்தியின் இறுதி பகுதியில் சந்திப்பார்.
10ம் வீடு ரிஷப ராசியுடன் சம்மந்தம் பெற்று சதவீத அடிப்படையில் 60% நன்மையான பலனை செய்யும். எந்த கிரகம் தன்னுடைய தசை மற்றும் புத்தியில் இந்த 10ம் வீட்டின் பலனை செய்கிறதோ, அப்போது இந்த நண்பர் நல்ல பலனை திசை மற்றும் புத்தியின் இடைப்பட்ட பகுதியில் சந்திப்பார்.
தீய பலன்கள் செய்யும் வீடுகள்:
2,4,6,8 ஆகிய வீடுகள் மீன ராசியுடன் சம்மந்தம் பெற்று சதவீத அடிப்படையில் 100% தீமையான பலனை செய்யும். எந்த கிரகம் தன்னுடைய தசை மற்றும் புத்தியில் இந்த வீடுகளின் பலனை செய்கிறதோ, அப்போது இந்த நண்பர் தீய பலனை தசை மற்றும் புத்தியின் இறுதி பகுதியில் சந்திப்பார்.
12ம் வீடு கடக ராசியுடன் சம்மந்தம் பெற்று சதவீத அடிப்படையில் 30% தீமையான பலனை செய்யும். எந்த கிரகம் தன்னுடைய தசை மற்றும் புத்தியில் இந்த 12ம் வீட்டின் பலனை செய்கிறதோ, அப்போது இந்த நண்பர் தீய பலனை தசை மற்றும் புத்தியின் முன் பகுதியிலேயே சந்திப்பார்.
5,9 ஆகிய வீடுகள் நண்பரின் சிம்ம இலக்கினத்திற்கு பாதக ஸ்தானம் எனப்படும் சிம்ம ராசியுடன் சம்மந்தம் பெற்று சதவீத அடிப்படையில் 130% தீமையான பலனை செய்யும். எந்த கிரகம் தன்னுடைய தசை மற்றும் புத்தியில் இந்த வீடுகளின் பலனை செய்கிறதோ, அப்போது இந்த நண்பர் தீய பலனை தசை மற்றும் புத்தியின் முன் பகுதியிலேயே சந்திப்பார்.
அடுத்த கட்டமாக இந்த நண்பர் வயது வாரியாக இதுவரை நடந்த கிரகங்களின் தசைகள் மற்றும் இனிமேல் நடக்கப்போகும் கிரகங்களின் தசைகள், எந்த மாதிரியான பலன்களை செய்தன மற்றும் செய்யும் என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் வயது வாரியாக கிரகங்களின் தசைகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
சுக்கிர தசை பிறந்து 7 மாதம் வரை செய்த பலன்கள்:
நண்பர் பிறந்த ஏழு மாதம் வரை சுக்கிர தசை நடந்துள்ளது. இந்த சுக்கிர தசை நன்மை தீமை என இரண்டு விதமான பலன்களை செய்துள்ளது. ஏழு வயது குழந்தையிடம் நாம் எதிர்பார்ப்பது உடல் நலனை மட்டுமே, எனவே உயிருக்கு ஆபத்து இல்லாமல் உடல்நலப் பிரச்சினையை மட்டும் சந்தித்திருப்பார்.
சூரிய தசை 6 வயது வரை செய்த பலன்கள்:
6 வயது வரை சூரிய தசை நடந்துள்ளது. இந்த சூரிய தசை முழுமையான கெடுதலை செய்துள்ளது. எனவே 6 வயது சிறுவனிடம் இருக்கக்கூடிய சுறுசுறுப்பு துடிதுடிப்பு இல்லாமல் இருந்திருப்பார். மேலும் இந்த காலகட்டத்தில் நண்பரின் குடும்பம் பொருளாதார அளவில் பின்தங்கிய நிலைக்கு சென்றிருக்கும்.
சந்திர தசை 16 வயது வரை செய்த பலன்கள்:
16 வயது வரை நடந்த சந்திர தசையில் ஜாதகர் பள்ளிப் படிப்பை முடித்திருப்பார். இந்த சந்திர தசை நன்மை தீமை என இரண்டு விதமான பலன்களை செய்வதால். படிப்பிலும் முழு ஆர்வத்துடன் இருந்திருக்க மாட்டார். விளையாட்டு ஆர்வம் அதிகமாக இருக்கும். பூர்வீக ஸ்தானம் கெட்டு இருக்கும் காரணத்தினால் நண்பர் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து படித்திருக்க மாட்டார். ஜாதகருக்கு இயற்கையாகவே புதன் பலம் பெற்று இருக்கும் காரணத்தினால் தாய் மாமன் உதவி முழுமையாக கிடைத்திருக்கும். இந்த காலகட்டத்தில் ஜாதகருக்கு தகப்பனின் அன்பு ஆதரவு கிடைத்து இருக்காது.
செவ்வாய் தசை 23 வயது வரை செய்த பலன்கள்:
23 வயது வரை நடந்த செவ்வாய் தசையில் ஜாதகர் பட்டப்படிப்பு படித்து இருப்பார். 30 சதவீத தீமை மட்டுமே செவ்வாய் தசை செய்யும் காரணத்தினால், ஓரளவு நன்றாக படித்து இருப்பார். புதன் பலம் பெற்று இருக்கும் காரணத்தினால் கணினி தொடர்பான துறையில் வித்தகராகத் திகழ்வார். அதேசமயம் செவ்வாய் தசை என்பதால் பெண்கள் தொடர்பான மோக வலையில் சிக்கி இருப்பார். இந்த காலகட்டத்திலும் தந்தையின் ஆதரவு அன்பை பெரிதாக பெற்றிருக்க மாட்டார்.
ராகு தசை 41 வயது வரை செய்யும் பலன்கள்:
தற்பொழுது நடக்கும் ராகு தசை ஜாதகருக்கு 41 வயது வரை நடக்கிறது. இதுவரை நடந்த கிரகங்களின் தசையை காட்டிலும் இந்த ராகு தசை முழுமையான நன்மையை ஜாதகருக்கு செய்கிறது. முழுமையான லாபஸ்தானத்தின் பலனை செய்யும் காரணத்தினால். விவேக சிந்தனை, நல்ல அறிவாற்றல், துணிச்சல், தீர்க்கமான முடிவு எடுத்தல், உறவுகளை மதித்தல், வெளிநாட்டில் வேலை, திருமணத்திற்கு பின் யோகம் என முழுமையான நல்ல பலனை அனுபவிப்பார். இந்த காலகட்டத்தில் தந்தையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
குரு தசை 57 வயது வரை செய்யும் பலன்கள்:
இந்த காலகட்டம் ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தின் பலன் நடப்பதால் குரு திசையின் முன்பகுதியிலேயே முழுமையான தீய பலனை சந்திப்பார். இந்தத் தீய பலனை சுக்கிரன் நின்று செய்யும் காரணத்தினால குழந்தை தாமதம் அல்லது குழந்தையின் உடல்நிலை பிரச்சனை பெரியவர்களின் சொல் கேளாமை, மனைவியுடன் தாம்பத்திய சுகத்தில் பிரச்னை, என்றவாறு முழு தீய பலனை சந்திப்பார்.
இவ்வாறாக நண்பரின் ஜாதகம் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட்டு விட்டது.
இனி ஜாதகரின் கேள்விக்கு பதிலை எளிமையாக சொல்லி விடலாம்.
கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடக்கும்?
பதில்: திருமணம் நடக்க தேவையான 2, 7 ஆகிய வீடுகள் மற்றும் ரிஷபம், துலாம் ஆகிய இராசிகள் நல்ல நிலையில் இருந்து, நடக்கும் தசை மற்றும் புத்திகள் இந்த 2, 7ம் வீடு அல்லது ரிஷபம், துலாம் ஆகிய இராசியின் பலனை செய்யும் போது எந்தவொரு ஜாதகருக்கும் திருமணம் நடைபெறும்.
அதன் அடிப்படையில் தற்போது 41 வயது வரை நடக்கும் ராகு தசை 7ம் வீடு மற்றும் ரிஷபம், துலாம் இராசிகளின் பலனை செய்துகொண்டு இருப்பதால் திருமணம் உறுதி.
தற்போது நடக்கும் குரு புத்தி 5,9 ஆகிய வீட்டின் தீய பலனை செய்வதால், அடுத்து வரும் சனி புத்தியில் 7ம் வீடு மற்றும் ரிஷபம், துலாம் இராசிகளின் பலன்கள் நடைபெற போவதால், சனி புத்தி முடிவதற்குள் திருமணம் நடைபெறும்.
வாழ்க்கைத் துணைவி நண்பரின் தாய்மாமன் மூலமாகவும், தாய்மாமன் உறவுகள் மூலமாகவும் அமைவர். மேலும் வாழ்க்கைத் துணைவியின் ஊர் ஜாதகரின் ஊருக்கு தென்கிழக்கு திசையில் இருக்கும் அல்லது அவரின் வீடு தெற்கு அல்லது கிழக்கு பக்கம் வாசல்படி வைத்த வீடாக இருக்கும்.
மேலும் உள் ஊரிலோ அல்லது நண்பரின் ஊருக்கு 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே இருக்கும். மேலும் நண்பரின் வாழ்க்கைத் துணையை முதல் முறையாக பார்க்கும் போது பச்சை வண்ண உடையில் பார்பார்.
கேள்வி: என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்: 41 வயது வரை இந்த நண்பருக்கு நடக்கும் ராகு தசை நல்ல பலன்களை செய்வதால், 41 வயது வரை எந்த தீய பலன்களையும் அனுபவிக்க மாட்டார். அடுத்து 57 வயது வரை நடக்கும் குரு தசையில் 5, 9 ஆகிய வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தீய பலனை செய்வதால், இந்த குரு தசை காலகட்டம் சிறப்பாக ஜாதகருக்கு அமையாது.
குரு தசைக்கு பிறகு வரக்கூடிய சனி, புதன், கேது ஆகிய கிரகங்களின் தசைகள் அடுத்தடுத்து நல்ல பலன்களை செய்வதால், அந்த கால கட்டங்கள் நண்பருக்கு இனிமையாக அமையும்.
எனவே ஜாதகர் 41 வயது முதல் 57 வயது வரை ஒரு மோசமான காலகட்டத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இப்படியாக நண்பர்களே நமது உயர் கணித ஜோதிட முறையில் ஒருவரின் ஜாதகத்தை துல்லியமாக கணிதம் செய்து அந்த ஜாதகரின் உண்மையான வாழ்க்கை நிலையை நூறு சதவிகிதம் புரியவைக்க முடியும்.
இந்தப் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.